ஹாய் ப்ரெண்ட்ஸ்.. எல்லாருக்கும் வணக்கம். இன்றைக்கு ஒரு புதிய அறிவிப்பு வந்திருக்கு. அதாவது, குடும்ப அட்டை இருந்தால் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது பற்றி வங்கி நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆலோசனை செய்தார்.

இந்த கலந்தாய்வில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பென்ஜமின், தலைமைச் செயலாளர் சண்முகம், வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக ஒட்டுமொத்த தொழில்களும் பெரும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் விவசாயக் கடன்களை வங்கிகள் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஊரகத் தொழில்களை மேம்படுத்தவும், புதிய தொழில் தொடங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஊரடங்கு ஆரம்பித்த காலத்தில் தமிழக அரசு சார்பாக அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும் அவர் கூறுகையில் பொதுத் துறை வங்கி அதிகாரிகள் அரசின் முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க வங்கிகள் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பொதுமக்களுக்கு முக்கியமான இன்ப செய்தியாக, குடும்ப அட்டை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 கடன் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. செல்லூர் ராஜூ மதுரையில் கூறுகையில், ”தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களாக விலையில்லாமல் ரேஷனில் உணவு பொருட்களை வழங்கி வருகிறது. தமிழக முதல்வரின் உத்தரவுப்படி கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை கடன் பெறலாம். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறினார்.
நண்பர்களே இந்த பயனுள்ள பதிவுகளை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.