லாக்டவுனில் நமக்கு வேலை கிடைக்குமா கிடைக்காதா !

jobs-tamil

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த லாக்டவுனில் நமக்கு வேலை கிடைக்குமா, கிடைக்காதா என்ற எண்ணம் நிறைய இளைஞர்களிடையே உருவாகி உள்ளது. ஏனென்றால் வேலைவாய்ப்பில் முக்கிய இடமான சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. எனவே அங்கு வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும் தற்போது நிறைய இன்டெர்வியூக்கள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன.

அதை கண்டுபிடித்து எப்படியாவது அப்ளை பண்ணிடுங்க. அதுதான் இனி உங்கள் வேலையாக இருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் உள்ளூரிலும் சின்ன சின்ன வேலைவாய்ப்புகள் இருக்கும். அதையும் தேர்வு செய்து அப்ளை பண்ணுங்க பிரெண்ட்ஸ். குறைந்த சம்பளத்தில் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று வீட்டில் சொன்னால், செவிடனாக இருந்து விடுங்கள். திட்டினால் குருடனாக இருந்து விடுங்கள். மேலும் மிக முக்கியம் ! இப்போது நமக்கு நிறைய நேரம் கிடைத்துள்ளது. எனவே இந்த நேரத்தை பயன்படுத்தி வேலை சம்பந்தமான கோர்ஸ், ஸ்போக்கன் இங்கிலீஷ், டெக்கினிக்கல் படிப்புகளை ஆன்லைனில் படிக்கலாம். நாட்களை வீணாக்கிவிடாதீர்கள். எல்லாம் உங்கள் கையில்தான்.

சில முக்கிய குறிப்புகள்:

நெகட்டிவாக உங்கள் உணர்வுகளை தூண்டும் வகையில் ஏதாவது கேள்வி கேட்டால் பயப்படாமல் தெளிவாக நிதானமாக பதில் சொல்லுங்கள்.

ஒரு இன்டர்வியூக்கு போகும்போது அந்த நிறுவனத்தை பற்றிய அனைத்து தகவல்களையும் இன்டர்நெட்டில் குறிப்பெடுத்துக் கொள்ளவும்.

இன்டெர்வியூவில் HR இதைத்தான் கேட்பார் என்று  தோன்றும் கேள்விகளையும், அதற்கான பதில்களையும் ஒருமுறை பேசிப்பார்த்து கொள்ளவும். (உதாரணமாக self-introduction)

இன்டெர்வியூவில் கேட்கும் கேள்விகளுக்கு தேவையில்லாத பொய்களை பேச வேண்டாம். எதார்த்தமாக பதில் சொல்லுங்கள்.

இக்கட்டான சூழ்நிலையில் எப்படி செயல்படுவது என்பதை கற்றுக் கொள்ளுங்கள். பல நிறுவனங்கள் உங்களிடம் இதை எதிர்பார்க்கும்.

இண்டர்வியூ முடிந்த மறுநாளிலிருந்து நிறுவனத்தை தொடர்புகொண்டு எப்போ எனக்கு வேலை தருவிங்க என்று கேட்காதீர்கள்.

நீங்கள் எந்த துறையில் படித்தவரோ, அந்த துறையில் ஆட்டோமேஷன் பற்றி தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

வெகு இயல்பாக கேள்விகளுக்கு பதில் அளியுங்கள். ஓவர்-ஆக்ட்டிங் வேண்டாம். ஈஸியா நம்மை நிராகரித்து விடுவார்கள்.

நமது அரசாங்கத்தில் வேலைவாய்ப்புக்கு என்று தனிப்பிரிவு உள்ளது. அதில் வாரம் தோறும் இன்டர்வியூ  நடத்தப்படும். இந்த www.ncs.gov.in இணைய தளத்தை பாருங்கள்

இந்த உபயோகமான தகவலை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *