Categories
entertainment

லாக்டவுனுக்கு பிறகு நாம் செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை

இந்த லாக்டவுன் நம்மில் நிறைய பேருக்கு வாழ்க்கை என்றால் என்ன என்பதை கற்று தந்துள்ளது. அதில் பலவற்றை இனி நாம் பின்பற்றினால் நம் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

லாக்டவுனில் முக்கியமா நாம கத்துக்கிட்டது, எது நமக்கு தேவை, தேவையில்லை என்று. எனவே எது உங்களுக்கு தேவையில்லையோ அதை தவிருங்கள்.
உதாரணம்: உங்களுக்குள் நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி – இப்போ இது(பொருள்) நமக்கு தேவைதானா???

EMI மற்றும் வட்டிக்கடன் இருக்குதுன்னா, அத மொதல்ல தீர்க்க கூடிய வேலையில இறங்குங்க. தீர்க்க முடியாவிட்டாலும், ஒரு பிளான் போட்டுக்கோங்க. எப்படி சீக்ரம் தீர்க்க வேண்டுமென்று.

வட்டிக்கடன் அதிகமாக இருக்குதுன்னா, உங்கள் நண்பர்கள் உறவினர்களிடமாவது கடன் வாங்கி அதை அடைக்க வழியை பாருங்க.

ரொம்ப வருஷமா பேசாம இருந்த உங்களோட பழைய பிரெண்ட்ஸ் நிறைய பேர் லாக்டவுன் சமயத்துல கால் பண்ணிருப்பாங்க. அவங்க நட்பை தொடருங்க, அது உங்கள் வாழ்க்கைக்கு மிக அவசியம்.

இவ்வளவு நாட்கள் வீட்டிலிருந்த ஆண்களுக்கு இப்போது தெரிஞ்சிருக்கும்.. இல்லத்தரசிகளின் அருமை! எனவே உங்க மனைவியை அடிக்கடி வெளியே கூட்டிட்டு போங்க..

ஆண்களே!! வெறும் மொபைலையே நோண்டாம தினமும் வீட்டில் நடப்பதை தெரிந்து கொண்டு அன்போடு ஒவ்வொரு காரியத்தையும் செய்யுங்க.

குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக கீழே அமர்ந்து சாப்பிட பழகுங்கள். அதையே தினமும் செய்ய உத்வேகம் காட்டுங்கள். (குறிப்பாக டிவி பார்த்து சாப்பிட வேண்டாமே…)

இதுபோல் நீங்கள் உங்கள் வாழ்வில் என்னவெல்லாம் மாற்ற விரும்புகிறீர்கள் என்பதை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் சொல்லவும்.. நன்றி

நண்பர்களே இந்த பதிவு சரியென்றால் கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *