லாக்டவுன் காலத்தில் புரட்டிப்போட்ட ஆம்பன் புயலின் கோர தாண்டவம்

amphan-storm

கடந்த சில நாட்களாக தமிழகத்தை அச்சுறுத்தி வந்த ஆம்பன் புயலானது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 27 கிமீ வேகத்துடன் வடகிழக்கு நோக்கி நகர்ந்தது. அது கொல்கத்தா- புவனேஸ்வர் – ஒடிஷா, மேற்கு வங்க மாநிலங்களை புரட்டிப் போட்ட ஆம்பன் புயலின் கோர தாண்டவத்துக்கு இதுவரை 12 பேர் பலியாகி உள்ளனர் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆம்பன் புயல் பாதிப்பால் கொல்கத்தா நகரில் நேற்று முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அனைவரும் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். கொல்கத்தாவில் ஆம்பன் புயலானது மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் காற்று வீசியுள்ளது.

மேலும் இது பற்றி அமெரிக்க புயல் எச்சரிக்கை மையம் கூறுகையில், இந்த புயலின் வேகம் கிட்டதட்ட அட்லாண்டிக் சூறாவளியை ஒத்தது என  தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயலில் சிக்கி 5500 வீடுகள், அழிந்து போனதாக தகவல் கசிந்துள்ளது. ஒடிசாவில் ஒரு லட்சம் பேரும், மேற்கு வங்கத்தில் 5லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியில் வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே இந்த புயல் கரையை கடக்கிறது. இந்த ஆம்பன் புயல் முழுமையாக கரையை கடக்க அரைமணி நேரம் ஆகும்.

கொரோனாவுக்கு மத்தியில் இப்புயலின் தாக்கம் உண்மையில் மக்களிடையே மிகப்பெரிய சோகத்தை கொடுத்துள்ளது. சீக்கிரம் இயற்கையின் பேரழிவில் இருந்து மக்கள் மீண்டுவர கடவுளிடம் வேண்டுவோமாக…

இதுபோன்ற பதிவுகளை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *