கொரோனா நோயின் காரணமாக ஊரடங்கு ஆரம்பித்ததால் இன்று வரை கோடிக்கணக்கான மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். வீட்டிலேயே இருப்பதால் மன அழுத்தம், எதிர்மறையான சிந்தனைகள் போன்றவற்றால் அவதிப்படாமல் இருக்க மற்றும் தினமும் உடற்பயிற்சி, உடல் நலம் பற்றி நம் மண்ணின் மைந்தன் திரு. சைலேந்திர பாபு அவர்கள் அடிக்கடி வீடியோ வெளியிடுகிறார்.
நம் தமிழகத்தில் ஊரடங்கு ஆரம்பித்த நாளிலிருந்து மக்கள் அனைவரும் எப்படி நாட்களை கடக்க போகிறோம் என்றிருந்த நேரத்தில் மக்கள் அனைவர்க்கும் நம்பிக்கை கொடுக்கும் விதமாக நம்பிக்கை நாயகன் திரு. சைலேந்திர பாபு அவர்கள் அடிக்கடி வீடியோ வெளியிடுகிறார்.

திரு. சைலேந்திர பாபு அவர்கள் கூறும் கருத்துக்கள் மற்றும் உடற்பயிற்சிகள் அனைத்து தமிழக மக்களிடையேயும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு திரு. சைலேந்திர பாபு அவர்கள் கூறும் அறிவுரை மிக அருமையாக உள்ளது.
இன்றைய வீடியோவில், வீட்டிலேயே சைக்கிள் ஓட்டுவது பற்றி மிக அருமையாக கூறி உள்ளார். மேலும் அவர் கூறிய வரிகளில் ஒன்றான “வலிச்சாதான் வலிமை வரும்” என்பது அனைவர் மனதிலும் நேர்மறையான எண்ணத்தை விதைக்கும் விதமாக உள்ளது.
நாம் செய்யவேண்டியது, இந்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் மட்டும் பண்ணுவதோடு இல்லாமல் இந்த குறிப்புகளை ட்ரை பண்ணி நம் வாழ்விலும் முன்னேற்றம் காண இறைவனை பிராத்திப்போம்.
வீடியோவை பார்க்க:
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் பண்ணுங்க -> https://www.youtube.com/watch?v=TKb-4QcuB2Q