Categories
Latest News

வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு !!

சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த அதிதீவிர டவ்தே புயல் இன்று காலை 5.30 மணியளவில் தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தற்போது டையூவிலிருந்து 160 கிலோமீட்டர் தெற்கு தென்கிழக்கு திசையிலும், மும்பை கடல் பகுதியிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை அல்லது இரவு குஜராத் மாநிலத்தின் போர்பந்தருக்கும் மஹீவாவுக்கும் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழக கடலோர பகுதியில் (குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை) 18.05.2021 இரவு 11.30 வரை கடல் அலை 2.0 முதல் 2.3 மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

17.05.2021 மற்றும் 18.05.2021 தினங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும். இன்னபிற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

19.05.2021 தேதியில் நீலகிரி, சேலம், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

20.05.2021 மற்றும் 21.05.2021 தினங்களில் நீலகிரி, தேனி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் இலேசான மழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

எனவே இந்த நியூஸை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் :
நீங்களும் இணைய இங்கே கிளிக் பண்ணுங்க 👉 https://chat.whatsapp.com/LabGlQl4NHiCyxLBkfikCX

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *