Categories
Latest News

வீட்டிலிருந்தே கொரோனா தொற்று பரிசோதனை செய்ய கருவி வடிவமைப்பு- ஐசிஎம்ஆர் அனுமதி

கொரோனா நோயின் பரவல் காரணமாக பலர் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் சிறு காய்ச்சல் வந்தால் கூட நமக்கும் கொரோனா இருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது. வீட்டிலேயே பரிசோதனை செய்து கொள்ள கருவி இருந்தால் நல்லா இருக்கும் என்ற எண்ணம் எல்லா தரப்பு மக்களிடையேயும் இருந்து வருகிறது.

கொரோனா இரண்டாம் அலை தற்போது இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. அரசு மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் நாம் எல்லாரும் மகிழ்ச்சி அடையும் விதமாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நிறுவனம் வீட்டிலிருந்தே ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட் என்ற சாதனம் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மூலம் தினந்தோறும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யபடுகிறது. இதனால் நோய்த்தொற்று உள்ளவர்கள் எளிதாக கண்டறியப்பட்டு விரைவாக சிகிசைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

சோதனையை அதிகப்படுத்த ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட் என்ற சாதனத்தை மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் வீட்டிலிருந்தே கொரோனா தொற்றை உறுதி செய்யும் வகையில் இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையை கவனமாக செய்ய வேண்டும் என ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது .இக்கருவி மூலம் கொரோனா அறிகுறி உள்ளவர்கள், நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தோர் பரிசோதனை செய்து உறுதிப்படுத்தி கொள்ளலாம்.

ஆனால் அறிகுறிகள் இருந்து இக்கருவி மூலம் சோதனை செய்து அதில் நெகட்டிவ் என வந்தால் உடனே மருத்துவமனைக்கு சென்று வழக்கமாக செய்யப்படும் ஆர்டிபிசிஆர் சோதனையை செய்ய வேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.

மேலும் இந்த சோதனையை மேற்கொள்ள மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. இதன் மூலம் தங்கள் சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படும். மேலும் பரிசோதனை செய்வதற்கான வழிமுறைகள் மக்களுக்கு கற்று தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் :
நீங்களும் இணைய இங்கே கிளிக் பண்ணுங்க 👉 https://chat.whatsapp.com/LabGlQl4NHiCyxLBkfikCX

இந்த பயனுள்ள செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *