10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய முக்கிய அறிவிப்புகள்

10th-exam

சீனாவில் ஆரம்பித்து உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ள நிலையில் தினமும் பல்வேறு பிரச்சனைகளை நாம் சந்தித்து வருகிறோம்.

கொரோனா வைரஸ் ஒருபுறம் இருக்க, மறுபுறம் புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனை, புயல், மழை, வெட்டுக்கிளிகள் அட்டகாசம் என தினம்தோறும் நம் மக்கள் கஷ்டப்பட்டு வருகின்ற சமயத்தில் தமிழ்நாட்டில் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய கவலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை தினமும் வாட்டி வருகிறது.

இது பற்றி தமிழக்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்கள் கூறியதாவது என்னவென்றால்,

பத்தாம்  வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் எனவும் பொதுத்தேர்வுகள் முடிந்த பின்னரே பள்ளிகள்  திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, பிள்ளைகளின் பெற்றோரை அழைத்து பள்ளிகள் திறப்பு குறித்து தீவிர ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே, பெற்றோர்களை அழைத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், பள்ளிப் பாடங்களைக் குறைப்பது குறித்து 16 பேர் கொண்ட உயர்நிலைக் குழு ஆய்வு செய்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

இந்த முக்கிய பதிவுகளை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *