
10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் வருகை பதிவேடு விவரங்களை உடனடியாக அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி தேர்வு நடத்துவது பற்றி, பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயரதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை மேற்கொண்டு 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தனர். இந்நிலையில் மதிப்பெண்ணானது காலாண்டு, அரையாண்டு தேர்வில் 80 சதவிகிதமும், 20 சதவிகிதம் வருகை பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் மேல் வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்த நிலையில் 10ம் வகுப்பு பொது தேர்வை நடத்துவதற்கு எல்லா தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால் 10ம் வகுப்பு பொது தேர்வை கைவிட வேண்டும் என தமிழக அரசுக்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் சார்பிலும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
அந்நேரத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. அப்போதைய விசாரணையில், தேர்வை நடத்துவதில் அவசரம் காட்டும் அரசு மீது சென்னை ஐகோர்ட் நீதிபதிகளும் அதிருப்தி தெரிவித்தனர்.
இதன் விளைவாக, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவ மாணவியர்களின் வருகை பதிவேடு பற்றிய விவரங்களை நாளைக்குள் மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்கும்படி பள்ளி கல்வித்துறை இன்று உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.
இந்த பதிவுகளை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.