Categories
Latest News

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக அலகு தேர்வுகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள்

கொரோனா நோயின் தாக்கத்தினால் மாநிலம் முழுவதும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தினால் தேர்வு நடத்தாமல் தேர்ச்சி வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தினால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக அலகு தேர்வுகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உயர்கல்வி காரணமாக கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அலகு தேர்வு நடத்துவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே மாணவர்கள், மாணவிகள் தனித்தனி குழுக்களாக பிரித்து வாட்ஸ்ஆப் மூலமாக கேள்வி தாள்கள் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

வாட்ஸ்ஆப் மூலமாக மாணவிகளுக்கு தனி குழு, மாணவர்களுக்கு தனி குழு அமைக்கப்படும்.

அதில் தனித்தனியாக தேர்வு நடைபெறும் போது வினாத்தாள் அனுப்பப்படும்.

மாணவ, மாணவிகள் தனித்தனியாக அனுப்பப்பட்ட வினாக்களை பார்த்து அதற்கான விடைகளை தனி தாளில் எழுத வேண்டும்.

பின்னர் விடைத்தாளில் பெற்றோர் கையெப்பம் பெற்று அதனை PDF ஆக மாற்றி பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விடைத்தாளில் பெயர் மற்றும் பதிவு எண் ஆகியவற்றை கட்டாயம் எழுத வேண்டும்.

கேள்விகள் அனுப்ப தொடங்கப்பட்டுள்ள அந்த வாட்ஸ்ஆப் குழுவில் வேறு எந்த செய்திகளோ, வீடியோக்களோ அனுப்ப கூடாது.

அதன் பின்னர் ஆசிரியர்கள் அந்த விடைத்தாள்களை திருத்தி அதற்கான மதிப்பெண் வழங்க வேண்டும்.

இந்த பயனுள்ள செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் :
நீங்களும் இணைய இங்கே கிளிக் பண்ணுங்க 👉 https://chat.whatsapp.com/LabGlQl4NHiCyxLBkfikCX

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *