Categories
Latest News

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஊசியில்லா தடுப்பூசி! டிசிஜிஐ அமைப்பிடம் ஜைடஸ் கெடிலா நிறுவனம் அனுமதி கோரி மனு

தற்போதைய சூழலில் படிப்படியாக கொரோனா பரவலை குறைப்பதில் நம் தமிழக அரசு கடுமையாக பணியாற்றி வருகிறது.கொரோனா தொற்றின் 2-வது அலை இந்தியாவில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

breaking-news-2

இந்நிலையில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசித் தயாரித்துள்ள பெங்களூருவைச் சேர்ந்த ஜைடஸ் கெடிலா மருந்து நிறுவனம் தான் கண்டுபிடித்த ஜைகோவ்-டி(ZyCoV-D) மருந்தின் பரிசோதனையை முடித்துவிட்ட நிலையில் அவசரப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கோரி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம்(டிஜிசிஐ) அனுமதி கோரியுள்ளது.

இதுவரை இந்தியாவில் 4 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசரப்பயன்பாட்டுக்கு அனுமதியளித்துள்ளது. இதன்படி, கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக், மாடர்னா ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. மேலும் ஜைடஸ் கெடிலாவுக்கு அனுமதி கிடைக்கும்பட்சத்தில் இந்தியாவில் 5-வது தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வரும். அதுமட்டுமல்லாமல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2-வது தடுப்பூசி என்ற அடையாளமும், முதல் டிஎன்ஐ வகை தடுப்பூசி என்ற பெருமையும் கெடிலா நிறுவனத்துக்கு கிடைக்கும்.

மேலும் ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசி 3 டோஸ்களைக் கொண்டது. முதல் டோஸ் எடுத்துக்கொண்டபின் 28வது நாளில் 2-வது டோஸும், 56-வது நாளில் 3-வது டோஸ் செலுத்த வேண்டும். நீடில்லெஸ் (அதாவது ஊசியில்லா) தொழில்நுட்பத்தில் இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. ஊசி மூலம் தடுப்பு மருந்து செலுத்தப்படாமல், தோல் பகுதியில் ஹைப்போடெர்மிக் நீடில்(hypodermic needle) மூலம் அதிர்வலைகள், வாயுக்களின் அழுத்தம், மின்முனை மூலம் செலுத்தப்படும்

இந்த தடுப்பூசி, மத்திய அரசின் உயிர் தொழில்நுட்பத்துறையின் கீழ்வரும்,உயிர்தொழில்நுட்பம் தொழில் ஆராய்ச்சி உதவிக் குழுவின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை பாதுகாத்து நீண்ட காலத்துக்கு பயன்படுத்த முடியும், 25 டிகிரி செல்சியஸ்வரை வைத்து, குறுகிய பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம்.

3-வது அலையை வராமல் தடுக்கும் நடவடிக்கையில் மத்தியஅரசு களமிறங்கி, தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்தி வருகிறது. ஏற்கெனவே 4 மருந்து நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 5-வதாக ஜைடஸ் கெடிலா நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.

இந்த நிறுவனம் தயாரித்துள்ள 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான டிஎன்ஏ வகை தடுப்பூசி சிறந்த முறையில் கரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாக கிளினிக்கல் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை 28ஆயிரம் பேரிடம் 3வது கிளினிக்கல் பரிசோதனையை ஜைடஸ் கெடிலா நிறுவனம் நடத்தியுள்ளது. இந்த புள்ளிவிவரங்களில், ஜைகோவ்-டி தடுப்பூசியின் பாதுகாப்பும், உருமாற்றம் அடைந்த வைரஸுக்கு எதிராக தடுப்பூசியின் செயல்திறனும் சிறப்பாக இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே 12 முதல் 18வயதுள்ள பிரிவினருக்கு ஜைகோவி-டி பாதுகாப்பானது என ஜைடஸ் கெடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்களுக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஆண்டுக்கு 10 முதல் 12 கோடி தடுப்பூசியை தயாரிக்க முடியும் என கெடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அவசரப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கக் கோரி மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் ஜைடஸ் கெடிலா நிறுவனம் மனு அளித்துள்ளது.

இந்த புதிய செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *