Categories
Latest News

144 தடை உத்தரவு அமல் – அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என என ஆட்சியர் அறிவிப்பு!!

நம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மாவட்ட ஆட்சியர்களின் ஆலோசனை மற்றும் சுகாதாரத்துறை, மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தல் படி, முழு ஊரடங்கு மே 10 முதல் மே 24 ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு அறிவித்திருந்தார். மேலும் முழு ஊரடங்கு நேரத்தில் பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் மிக அதிகமாக உள்ள காரணத்தினால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தினால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அம்மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூட அனுமதி இல்லை. அத்தியாவசிய தேவையின்றி மளிகை, காய்கறி, தேநீா் மற்றும் உணவகங்களில் கூடி அமா்ந்து பேசுவதை தவிா்க்குமாறும் கூறப்பட்டுள்ளது.

மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும். தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேநீர் கடைகள், உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

தேவையின்றி டீ கடைகளில் அல்லது உணவகங்களில் கூட்டமாக அமர்ந்து பேசுவதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு சொல்வதை கேட்டு வீட்டில் தனித்திருப்போம்.. கொரோனாவை வெல்வோம்..

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் :
நீங்களும் இணைய இங்கே கிளிக் பண்ணுங்க 👉 https://chat.whatsapp.com/LabGlQl4NHiCyxLBkfikCX

இந்த நியூஸை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *