Categories
Latest News

7 நாட்களுக்கு காய்கறி, மளிகை கடைகள் இயங்காது – மறுபரிசீலனை செய்ய மக்கள் கோரிக்கை

கொரோனா வைரசின் இரண்டாம் அலை உச்சத்தில் உள்ளது. சமூக பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கனவே அமலில் உள்ளன. இந்த முழு ஊரடங்கானது வரும் 24- ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

அதன்படி திங்கட்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உளளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இன்றும், நாளையும் மட்டும் வெளியூர் பயணத்திற்கு தனியார், அரசுப்பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்படும்.

ஒரு வாரத்திற்கு முழு முடக்கம் காரணமாக காய்கறி, மளிகை கடைகள் இயங்காது என அரசு அறிவித்துள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது, மளிகை கடைகள் ஒரு வாரத்திற்கு அடைக்கப்பட்டால் உணவகங்கள் செயல்படுவது கஷ்டம். ஒரு வாரத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி வைத்தால் காய்கறிகள் அழுகி வீணாகும் நிலை ஏற்படும். காய்கறி விற்பனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். அதனால் குறைந்த நேரமாவது காய்கறி, மளிகை கடைகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பயனுள்ள செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் :
நீங்களும் இணைய இங்கே கிளிக் பண்ணுங்க 👉 https://chat.whatsapp.com/LabGlQl4NHiCyxLBkfikCX

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *