EB ரீடிங், மின்கட்டணம் இப்படித்தான் கணக்கீடு பண்ணுவாங்க பிரெண்ட்ஸ்

tneb-new-reading

2020 ஆம் வருடம் மீண்டும் மீண்டும் நம்மை சோதிப்பதில் தீவிரமா இருக்குன்னு தோணுது.. ஒவ்வொரு நாளும் பிரச்சனைகள் ருத்ர தாண்டவம் ஆடுகிறது. தற்போது தமிழக மக்கள் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது இந்த மின்கட்டணம்.

ஏற்கனவே மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூன் 15 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், கொரோனா நோயின் பாதிப்பு அதிகமுள்ள 4 மாவட்டங்களில் ஜூலை 5 2020 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

லாக்டவுன் நேரத்தில் மின் ஊழியர்கள் வீடு வீடாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் முந்தைய கால ரீடிங்க் தொகையை செலுத்தலாம் என்று மின்வாரியம் அறிவித்தது. எனவே இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எடுக்க வேண்டிய ரீடிங் கொரோனா பாதிப்பால் தற்போது 4 மாதங்களுக்கு கணக்கெடுக்கப்படுகிறது என்பதும் இந்த அதிகரிப்புக் காரணாமாக அமைகிறது. லாக்டவுன் கோடை காலம் என்பதாலும், வீடுகளில்தான் மக்கள் எல்லாரும் இருந்ததாலும் மின் சாதனங்கள் அதிகமாகப் பயன்படுத்தப் பட்டதாலும் வழக்கமாக வரும் தொகையை விட கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய காட்டாயம் வந்துள்ளது.

அதாவது நீங்கள் கடந்த முறை கட்ட வேண்டிய தொகை கணக்கிடப்பட்டிருக்கிறது. தற்போதைய சுழற்சிக்கான மீட்டர் ரீடிங்க் எடுக்கப்பட்டு அதன்படி கட்டணம் கணக்கிடப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சுழற்சிக்கும் தரப்படும் 100 யூனிட் மானியம் கழிக்கப்பட்டு, முந்தைய மாதத்துக்கு செலுத்தப்பட வேண்டிய தொகை இந்தமுறை சேர்க்கப்பட்டு இருக்கிறது.

இந்த முக்கிய பதிவுகளை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *