Categories
Latest News

மிக அவசர செய்தி : அருகிலுள்ள மருத்துவமனையில் உள்ள காலி படுக்கைகளை தெரிந்து கொள்ளும் வழிமுறை

மிக முக்கிய அவசர செய்தி!

நமது அரசு இந்த கொரோனா கால அவசர நிலையை கணக்கில் கொண்டு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த கொடிய கொரோனா கால சூழ்நிலையில் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்கு மருத்துவமனைகளில் போதிய இடவசதி இல்லை என கூறப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது . இந்த அறிவிப்பில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எவ்வளவு படுக்கைகள் உள்ளது என்ன விதமான படுக்கைகள் உள்ளன. அதில் எவ்வளவு படுக்கைகள் காலியாக உள்ளன என்பவற்றை தெரிவிப்பதற்காக புதிய இணைய பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையப்பக்கத்தில் நுழைவதன் மூலம் எந்தெந்த மருத்துவமனைகளில் எவ்வளவு படுக்கைகள் காலியாக உள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்த இணையப்பக்கத்தை இயக்கும் வழிமுறைகள் :

முதலில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இணையப்பக்கத்திற்குள் நுழையவும்.

https://tncovidbeds.tnega.org/

உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுங்கள்

பாதிக்கப்பட்ட நபர்களின் பாதிப்பு மற்றும் பாதித்த நபர்களின் தேவையை பொறுத்து தேவையானவற்றை டிக் செய்யவும்

அரசு மருத்துவமனையா அல்லது தனியார் மருத்துவமனையா என டிக் செய்யவும்

இப்பொழுது உங்கள் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு மருத்துவமனையும் அதிலுள்ள படுக்கைகள் குறித்த தகவலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள search வசதி மூலமாக நீங்கள் தேடும் மருத்துவமனையை ஈஸியாக தேர்ந்தெடுக்கலாம்.

தேவையான மருத்துவமனையை தேர்ந்தெடுக்கவும்.

அதிலுள்ள போன் பட்டனை அழுத்துவதன் மூலம் தாங்கள் தேர்ந்தெடுத்த மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு பேச முடியும். இவ்வாறு கால் செய்து பேசுவதன் மூலம் அந்த மருத்துவமனையில் தற்போது எத்தனை படுக்கைகள் காலியாக உள்ளன என்பதையும் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

மேப் பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது. மேப் பட்டனை கிளிக் செய்வதன் மூலம் அந்த மருத்துவமனை எங்கு உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

ஷேர் பட்டனை அழுத்துவதன் மூலம் இந்த பக்கத்தை வாட்சப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் வாயிலாக உதவி தேவைப்படுபவர்களுக்கு பகிரலாம்.

அரசின் இந்த வசதி இந்த முக்கியமான காலகட்டத்தில் மிகவும் உதவிகரமாக இருக்கும். இதனை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

அரசு மருத்துவமனைகளுக்கு

https://tncovidbeds.tnega.org/


தனியார் மருத்துவமனைகளுக்கு https://stopcorona.tn.gov.in/beds.php


அனைத்து விபரங்களுக்கு

https://stopcorona.tn.gov.in/

முக்கிய குறிப்பு:- Tamil Nadu COVID Beds Availability Status
மருத்துவமனைகளில் கோவிட் பயன்பாட்டிற்கு உள்ள காலி படுக்கைகளின் விவரம் இந்த வலைத்தளத்தில் அந்தந்த மருத்துவமனைகளால் தினமும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.எனினும், சிகிச்சை பெறுவோரின் சேர்க்கைகள் மற்றும் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையின் மாறும் தன்மை காரணமாக படுக்கைகளின் இருப்பு நிலை அவ்வப்போதான மாற்றத்திற்குட்பட்டது.காலிபடுக்கைகளின் சமீபத்திய விவரத்தினை அறிய சம்பந்தப்பட்ட மருத்துவமனையினை தொலைபேசி மூலமாக தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.மேலும், காலிபடுக்கைகளின் விவரம் பதிவேற்றம் தொடர்பான தேதி மற்றும் நேரம் ஒவ்வொரு மருத்துவமனைகளின் பெயருக்குக்கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

The bed availability data provided on this website is updated daily by the respective hospitals.However, due to the dynamic nature of admissions and discharge the bed availablity status may have changed since the update.We advise you to call the hospital to get the latest status. The bed availability updated date and time is displayed below each hospital.

2 replies on “மிக அவசர செய்தி : அருகிலுள்ள மருத்துவமனையில் உள்ள காலி படுக்கைகளை தெரிந்து கொள்ளும் வழிமுறை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *