Categories
Govt Jobs

Jio ப்ரீபெய்ட் பயனர்களுக்கு சூப்பர் ஆபர்! 11 ரூபாயில் 1GB டேட்டா

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பலவித சலுகைகளை 10 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை பல திட்டங்களை வழங்கி வருகின்றது. அதிலும் குறிப்பாக இந்த ஊரடங்கு காலத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பல ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

jio

கடந்த வருடம் முதல் இந்தியாவில் ஊரடங்கு வந்ததன் காரணமாக நிறைய பேர் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அனைவரும் மாதந்தோறும் ரீசார்ஜ் செய்து தான் தங்களது அலுவலக வேலைகளை பார்த்தனர். சில நேரங்களில் தினசரி டேட்டா முடிந்து பயனர்கள் கஷ்டப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு ஜியோ நிறுவனம் தங்களது பயனர்களுக்கு என்று ஒரு பிரத்யேக ரீசார்ஜ் சலுகையினை அறிமுகப்படுத்தியுள்ளது.

அது என்னவென்றால், ப்ரீபெய்ட் பயனாளர்கள் தங்களது தினசரி டேட்டாவை பயன்படுத்தி விட்டால், 11 ரூபாயில் 1 ஜிபி டேட்டாவை பெற முடியும். இந்த திட்டத்தினை பெற்றுக் கொண்டு அதன் பிறகு கட்டணத்தை செலுத்தி கொள்ளும் வசதியினை ஜியோ நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தினை 5 முறை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை பயனர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்த புதிய செய்திகளை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *