தமிழக அரசின் உத்தரவுப்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்து கிடையாது என்றும் மற்ற மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிபந்தனைக்கு உட்பட்டு இயக்கப்பட உள்ளன. மேலும் கொரோனா நோயின் தாக்கம் காரணமாகவும், பொது இடங்களில் சில கோட்பாடுகளை நம் அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. எனவே வீட்டை விட்டு வெளியே வரும் போது எல்லாரும் பின்வரும் விஷயங்களை தெரிந்து கொண்டு வெளியே வாங்க. காய்ச்சல், இருமல் உள்ளவர்களுக்கு பேருந்தில் பயணிக்க அனுமதி கிடையாது. […]
