Categories
Private Jobs

NSDC புதிய ஒப்பந்தம்! 50,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

இந்தியாவில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமானது 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிகளை அளிக்க திட்டமிட்டு உள்ளது. இதற்கென்று NSDC தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

samsung-jobs

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இதனால் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின. இதனால் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்தது.

தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தொழில் துறைகள் மெல்ல எழுச்சி பெற தொடங்கி உள்ளன. இந்நிலையில் இளைஞர்களுக்கு அதிகளவு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் நோக்கில் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (NSDC) துரிதமாக செயல்பட்டு வருகிறது.

இந்திய இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு ஆயத்தப்படுத்தும் நோக்கத்தில் NSDC, சாம்சங் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. அதன்படி 50,000 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ், இளைஞர்கள் 200 மணிநேர நேரடி மற்றும் ஆன்லைன் பயிற்சியை பெற உள்ளனர்.

அதன்பிறகு சாம்சங் நிறுவனத்தின் சில்லறை கடைகளில் ஐந்து மாத வேலைவாய்ப்பு பயிற்சி மாதாந்திர உதவித்தொகையுடன் வழங்கப்பட உள்ளது. இதற்காக பள்ளி கல்வியை முடித்த இளைஞர்கள் மற்றும் நாடு முழுவதும் 120 மையங்களில் NSDC யின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பயிற்சி பெற்ற மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என கூறப்பட்டு உள்ளது.

இந்த புதிய செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *