ஆன்லைன் எக்ஸாம் தேவையா ! நேரடி எக்ஸாம் தேவையா - உங்கள் கருத்தை உடனே பதிவிடுங்கள்

Loading ... Loading ...

ஆன்லைன் எக்ஸாம் தேவையா அல்லது நேரடி எக்ஸாம் தேவையா என்று இணையத்தில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் உங்கள் கருத்தை பதிவிட உடனே வாக்களிக்கவும்.

இந்த வாட்சப் ஷேர் பட்டனை அழுத்தி உங்கள் நண்பர்களுக்கு உடனே தெரியப்படுத்துங்கள்.

Note: இதில் பதிவிடுபவர்களின் எந்த ஒரு விபரங்களையும் நாங்கள் கேட்பதில்லை. உங்களின் எந்தவொரு Personal Datas நாங்கள் பதிவு செய்வதில்லை.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நேரடி கல்வி முறையில் மாற்றம் ஏற்பட்டு ஆன்லைன் வழியில் பாடம் நடத்துவது முக்கியத்துவத்தும் பெற்று உள்ளது. இதன் காரணமாக கடந்த நாட்களில் தமிழ்நாட்டிலும் சரி மற்ற மாநிலங்களிலும் சரி, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. எனவே அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தப்பட்டது.

கொரோனா குறையாத காரணத்தால் பின்பு தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாக எழுத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அனைத்து பல்கலைகழகம் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் வீட்டிலிருந்தே செமஸ்டர் தேர்வுகள் எழுதி விடைத்தாளை கல்லூரியில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதாவது உயர் கல்வித்துறையில் நடத்தப்படும் ஆன்லைன் பருவத்தேர்வில் மாணவர்கள் புத்தகங்களைப் பார்த்து தேர்வு எழுதலாம் (open book exam) என தமிழ்நாடு உயர் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

இனிவரும் காலங்களில் வழக்கம் போல் செமஸ்டர் தேர்வுகள் நேரடி முறையில் மாணவர்கள் கல்லூரிக்கு வந்து தேர்வு எழுதுவது நடக்குமா! அல்லது ஆன்லைன் எக்ஸாம்தான் இருக்குமா என்ற கேள்வி பலர் உள்ளங்களில் எழுந்துள்ளது. ஆன்லைன் எக்ஸாம் தேவையா ! நேரடி எக்ஸாம் தேவையா என்று இணையத்தில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் உங்கள் கருத்தை பதிவிட மேலே உள்ள இணைப்பில் சென்று வாக்களியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *