பொதுமக்களாகிய உங்கள் Vote ஐ பதிவிடவும்? பள்ளிகள் திறப்பு – நேரடி வகுப்புகள் தேவையா? ஆன்லைன் வகுப்புகள் தேவையா?

Loading ... Loading ...

உங்க மனதின் கருத்தை நீங்க சொல்லுங்க நண்பா.. ஆன்லைன் வகுப்புகள் தேவையா அல்லது நேரடி வகுப்புகள் தேவையா!! இது பற்றி இன்று இணையத்தில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் உங்கள் கருத்தை பதிவிட உடனே வாக்களிக்கவும்.

மேலே உள்ள வாட்சப் பட்டனை அழுத்தி உங்கள் நண்பர்களுக்கு உடனே தெரியப்படுத்துங்கள்.

Note: இதில் பதிவிடுபவர்களின் எந்த ஒரு விபரங்களையும் நாங்கள் கேட்பதில்லை. உங்களின் எந்தவொரு Personal Datas நாங்கள் பதிவு செய்வதில்லை.

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக இன்றைய காலகட்டத்தில் நேரடி கல்வி முறையில் மாற்றம் ஏற்பட்டு ஆன்லைன் வழியில் பாடம் நடத்துவது அத்யாவசியமாகி உள்ளது. நமது தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் பள்ளிகளில் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைனிலும் வகுப்புகள் நடத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளி நிர்வாகங்கள் குழப்பத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டு வந்த பாதிப்புகளில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா 3ம் அலை அதிக அளவில் குழந்தைகளை தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பரவல் விகிதம் குறைந்துள்ளதால் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களான 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கருத்தப்பட்டது.

ஆனால் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பிப்ரவரி 1ம் தேதியான நாளை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் மாணவர்களின் பெற்றோர்கள் மிகுந்த நிம்மதி அடைந்தனர். எனினும் கொரோனா அச்சம் இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு நேரில் வருவது கட்டாயம் கிடையாது என்றும், ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து பள்ளி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம்.

பள்ளிக்கு வரும் மாணவர்கள் முழுமையாக கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டு வரும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அதன் விளைவுகளை பள்ளி நிர்வாகத்தினர் தான் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இதனால் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பள்ளிகள் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் வழக்கம் போல் வகுப்புகள் நேரடி முறையில் நடக்குமா! அல்லது ஆன்லைன் வகுப்புகள்தான் இருக்குமா என்ற கேள்வி பலர் உள்ளங்களில் எழுந்துள்ளது. ஆன்லைன் வகுப்புகள் தேவையா ! நேரடி வகுப்புகள் தேவையா என்று இணையத்தில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் உங்கள் கருத்தை பதிவிட மேலே உள்ள இணைப்பில் சென்று வாக்களியுங்கள். நன்றி நண்பர்களே..

மேலும் கீழே உள்ள வாட்சப் பட்டனை அழுத்தி உங்கள் நண்பர்களுக்கு உடனே தெரியப்படுத்துங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *