
நீங்கள் தல ரசிகனா ? அல்லது தளபதி ரசிகனா ? என்று இணையத்தில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது . நீங்க ரசிகனா.. இல்லை அதையும் தாண்டியா… இவர்களில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்பதை பதிவிட உடனே இணைப்பில் சென்று வாக்களிக்கவும்
தமிழ்நாட்டில் தல மற்றும் தளபதிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. திரைப்படம் ரிலீஸ் ஆகும் முன்பே தவமாய் தவமிருந்து ஒவ்வொருநாளும் படத்தின் அப்டேட்டை பார்த்து, சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து, வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்து கொண்டாடி மகிழ்வது வழக்கம்.
ஒருகாலத்தில் சாக்லெட் பாயாக இருந்து பெண் ரசிகைகளால் கொண்டாடப்பட்டவர் தல. பெண்கள் கூடி பேசும் நேரங்களில் அஜித் மாதிரி ஒரு பையன் என்ற பேச்சு அடிபடாமல் இருக்கவே இருக்காது. இது தான் பெண்கள் பின்னால் சுற்றாமல் பெண்ணே சுற்றும் பேரழகன் என வைரமுத்துவையும் எழுத வைத்தது. தல அஜித் ரசிகர்கள் பற்றி சொல்லவேண்டுமென்றால், எத்தனை தோல்விகளை சந்தித்தாலும் எந்த சூழ்நிலையிலும் மாறாத ரசிகர்கள். அதிலும் தல அஜித்துக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூடிவருவது மறுக்கமுடியாத ஒன்று. 1 அல்லது 2 வருடத்துக்கு திரையில் தலையின் தரிசனம் என்றாலும் அஜித்துக்கான ரசிகர் பட்டாளம் துளியும் குறையாது.
அதேபோல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். நடிப்பு, நடனம், பாடல், காமெடி, ஆக்ஷன், டயலாக் டெலிவரி என ஒரு நடிகருக்குத் தேவையான அத்தனை அம்சங்களுடனும் தெறிக்க விடுகிறார் நடிகர் விஜய். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிய ரசிகர் படையைக் கொண்டவர் விஜய். திரைத் துறையில் இவருக்கு ஏராளமான ஏற்றத்தாழ்வுகள் வந்த போதும் இவருடைய ரசிகர்கள் இவருக்குப் பக்கபலமாய் நின்று இதுநாள் வரை தாங்கி வருகின்றனர். தனது கடின உழைப்பாலும், தோல்விகள் பலவற்றைக் கண்டும் கைவிடாத தன்னம்பிக்கையாலும் இன்று மாபெரும் வெற்றி சிகரத்தை அடைந்திருக்கிறார்.
நீங்கள் தல ரசிகனா ? அல்லது தளபதி ரசிகனா ? என்று இணையத்தில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது . இவர்களில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்பதை பதிவிட மேலே உள்ள இணைப்பில் சென்று வாக்களியுங்கள்.