300க்கு மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ளும் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் 20,000க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நவம்பர் 26 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது!!!
- படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது
- ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாதந்தோறும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தி வருகிறது.
- நவ. 26 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
- இந்த வேலைவாய்ப்பு முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள் காப்பீடு,மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
- இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள தகுதியாக 8ம் வகுப்பு., 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து கல்வித்தகுதியை சேர்ந்தவர்களும் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அது மட்டுமில்லாமல் நவம்பர் 26 ஆம் தேதி காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இந்த முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்களும், வேலை தேடுபவர்களும் tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என சேலம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- Padmavani College of Arts and Science for Women, opposite to Periyar University in Salem District. இடத்தில் நேரடியாக வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படும் !!!
Notification Link->https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/182211170001